கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி கடல் மேல் பாலத்தின் நிர்மாண நடவடிக்கைகளின் ஆரம்ப அடிக்கல் நடும் வைபவம் நாளை (14) ஞாயிற்றுக் கிழமை இடம் பெறவுள்ளது
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தலைமையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஆகியோர்களின் பங்கேற்புடனும் ஆரம்பிக்கப்பட இருக்கும் இவ் வைபவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு பால நிர்மாண நடவடிக்கைக்கான அடிக்கல்லை நட்டு வைப்பார்.
மிக நீண்ட காலமாக நிர்மாணிக்கப்படாமல் இருந்த குறித்த பாலமானது தற்போது சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அப்துல்லா மஃறூப் எம்.பியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிர்மான நடவடிக்கைகள் மதியம் 1.30 மணிக்கு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
இவ் அங்குராப்பண நிகழ்வில் வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் மற்றும் பெற்றோலிய வள அமைச்சர் கபீர் காசிம் உட்பட உள்ளூராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், அரச உயரதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
