எச்.எம்.எம்.பர்ஸான்-
ஆறு மாதகால தையல் பயிற்சியினை மேற்கொண்டு அதில் சிறந்த முறையில் தையல் கலையினை பயின்றுகொண்ட யுவதிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (10) ம் திகதி மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி மூன்றாம் வட்டார கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எம்.ஐ.எம்.புகாரி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தையல் பயிற்சினை நிறைவு செய்த பதினாறு யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு நினைவுச்சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் புதல்வர் வைத்தியர் அப்தாப் அலி, ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.ஜீ.அமீர் ஆசிரியர், எம்.பீ.எம்.ஜஃபர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றியாஸ், பலநோக்கு கூட்டுறவுச் சங்க உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.ஹாதி, ஓட்டமாவடி அல் ஹிஜ்ரா வித்தியாலய அதிபர் எம்.ஏ.ஸாபிர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இவ் கௌரவிப்பு நிகழ்வை ஓட்டமாவடி மூன்றாம் வட்டார கிராம அபிவிருத்தி சங்கத்தினர் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.