ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அஸசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் ஆகியேர்களை பதவி விலகுமாறு கோரி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வெற்றி பெற்றுள்ளீர்கள்.அதற்கு உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
அதே போன்று, உமக்கு வாக்களித்து உங்களை பாராளுமன்றம் அனுப்பிய உமது தமிழ் மக்களின் நீண்ட நாள் பிரச்சினையாக காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோர், அதே போன்று தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளம் போன்ற பிரச்சினைகளுக்காகவும் இதுபோன்று சுழற்சி முறை இல்லாமல் தொடர் உண்ணாவிரதம் இருந்து பெற்றுக்கொடுக்க உங்களால் முடியுமா?
அவ்வாறு பெற்றுக்கொடுப்பீர்கள் என்றால் உங்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை எப்பொழுது ஆரம்பிக்கப்போகின்றீர்கள்.
-ப.றுஹைமி
சம்மாந்துறை