வரலாற்றுப்பிரசித்திபெற்ற ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் விசேட பொதுக்கூட்டம் இன்று(15) சனிக்கிழமை காலை 10மணிக்கு ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கடந்த 05 ஆண்டுகளுக்கான (2013 - 2017) கணக்கறிக்கைகள் வாசித்து அங்கீகரித்தல் இடம்பெறும்.
5ஆண்டுகளுக்குமான வரவுசெலவு அறிக்கைகள் யாவும் வீ.ஞானசூரியம் மற்றும் த.சுதர்சன் ஆகியோரால் கணக்காய்வு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு பஞ்சாயசபையினர் அறுவரின் பெயர்விபர ஒப்புதலோடு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இன்று காரைதீவில் அமைச்சர் தயாகமகே!
அதேவேளை காரைதீவுப்பிரதேச புதிய சமுர்த்தியாளர்களுக்கான சமுர்த்தி உரித்துப்படிவம் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று(15) பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நடைபெறவுள்ளது.
பிரதமஅதிதியாக சமுகவலுவூட்டல் ஆரம்பக்கைத்தொழில் அமைச்சர் தயாகமகே கலந்துகொண்டு வழங்கிவைப்பார்.