காரைதீவு மக்கள் வங்கிக்கிளை ஏற்பாடு செய்தநோன்பு துறக்கும் மாபெரும் இப்தார் நிகழ்வு காரைதீவு மக்கள்வங்கியின் முகாமையாளர் தி.உமாசங்கரன் தலைமையில் (04) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
பிரதம அதிதியாக மக்கள் வங்கியின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் கபில திசாநயாக்க கலந்துசிறப்பித்தார்.
பிரதேசத்தில் தெரிவான வறுமைநிலைக்குட்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.. வழமையாக கடைப்பிடிக்கப்படும் நோன்பு விருந்து தவிர்க்கப்பட்டு பெருநாள் பொதிகள் வழங்கப்பட்டன.
அங்கு பிரதமஅதிதி உரையாற்றுகையில்:
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பின் இறுதிப்பகுதியில் உள்ளம் நொந்த நிலையில் அனைவரையும் ஒருங்கே சந்திப்பதற்குக் கிடைத்த வாய்ப்பைத் தந்த வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
ரமழான் என்கிற இந்தமாதமானது முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அதிகமான நன்மைகளைச் சம்பாதிக்கக்கூடிய ஒரு மாதமாக கருதப்படுகிறது. பசித்தும் தாகித்தும் இருப்பதனூடாக ஏழைகளின் பசியை உணரக்கூடியதையும் அதிக தான தர்மங்கள் செய்யக்கூடிய பக்குவத்தையும் இந்தமாதம் வழங்குகின்றது.
பொறுமை சகிப்புத்தன்மை போன்ற பாடங்களையும் கற்றுத்தரும் மாதமாகவும் திகழ்கின்றது.
சில தீவிரப்போக்குக் கொண்டவர்கள் ஆசையின் காரணமாகவே நாட்டில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்துகின்றார்கள் என்பது சாதாரண மக்களும் அறிந்த உண்மையாகும். என்று தெரிவித்த முபாறக்
இந்த நிகழ்வை தான் சமாதானத்துக்கான ஒன்றுகூடலாகவே பார்ப்பதாகவும் இங்கு கூடியிருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் பயனாளிகளில் தமிழ்மக்கள் முஸ்லிம் மக்கள் உள்ளீர்கள். நீங்கள் அனைவரும் ஏனையோரும் எதிர்பார்ப்பது சமாதானத்தைத்தான் . அனைவரும் சமாதானமாக ஒரு தாயின் பிள்ளைகளைப்போல வாழவேண்டும் . அனைவருக்கும் முன்கூட்டிய நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.என்றார்.
வங்கி ஊழியர்களும் கலந்துகொண்டார்கள். நன்னியுரையை வங்கி உத்தியோகத்தர் சியாமினி சதாசிவம் நிகழ்த்தினார்.