சிறப்பாக இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்..

எம்.பஹ்த் ஜுனைட்-
காத்தான்குடியில் இயங்கிவரும் மிக முக்கியமாக நிறுவனங்களில் ஒன்றான காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2019-2020 க்கான பொதுச்சபைக் கூட்டம் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி. எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் காத்தான்குடி.03 முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது.
இப் பொதுச் சபை கூட்டத்தில் சம்மேளனத்தின் தலைவர் மெளலவி எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமை உரை நிகழ்த்தியதுடன் செயலாளர் மெளலவி . எஸ்.எச்.எம்.றமீஸ் ஹாபிழ் (ஜமாலி) அவர்களினால் சென்ற பொதுச்சபை கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது. அத்துடன் சம்மேளனத்தின் உறுப்பினர் எம்.சீ.எம். ஜவ்பர் அவர்களினால் செயற்பாட்டு அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 2019-2020 க்கான புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டது அத் தெரிவில் சம்மேளனத்தின் புதிய தலைவராக எம்.ஏ.சி.எம்.சத்தார்( பீ.ஏ) மற்றும் செயலாளராக அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.சபீல்(நளீமி) அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன், பொருளாளராக எஸ்.எச்.அன்சார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் மேலதிகமாக ஆறு உப தலைவர்களும் இரண்டு உப செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -