அடிப்படை அடையாளங் காணப்படாத தொற்றா சிறுநீரக நோயினால் பாதிக்கப்படட்டுள்ள நோயாளர்களுக்கு சிறந்த தரமான பராமரிப்பு சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்காக கொண்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அதற்காக மேலும் 3 புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கமைவாக தொற்றா நோயான சிறுநீரக நோயின் அடிப்படையை அறிந்து கொள்ளுதல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஆய்வுத் திட்டம் மற்றும் சிறுநீரக நோய் தடுப்பு செயல்திறன் பிரிவின் கண்காணிப்பின் கீழ் கண்டி போதனா வைத்தியசாலையின் மூலம் நடைமறைப்படுத்துவதற்கும் சிறுநீரக நோய்த் தகவல்கள் மற்றும் ஆய்வு மத்திய நிலையமொன்றை நிர்மாணிக்கும் பணிகள் களனி பல்கலைக்கழகத்தின் மூலம் மேற்கொள்வதற்கும் சிறுநீரக நோய்க்காக தேசிய வைத்திய சிகிச்சை முறையை பயன்படுத்துதல் மற்றும் சிகிச்சை செயல் திறன் மேம்பாட்டு வேலைத்திட்டமொன்றை பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய வைத்திய ஆய்வு நிறவனத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. 2019 – 2022 ஆண்டுக்கான உபகரணங்கள் தொடர்பான இணையதளம் என்ற தேசிய மூலோபாயத் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 12ஆவது விடயம்)
பல்வேறு உபகரணங்கள் மற்றும் கருவிகள் இணையதளத்தின் ஊடாக தொடர்பாடல் தொழில்நுட்பமான கருவிகள் தொடர்பான இணையதளம் IoT ( Internet of things ) உலகின் எதிர்வரும் புரட்சிமிக்க பரிமாற்ற தொழில்நுட்பமாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. பெரிய பிரித்தானியாவின் பொறியிலாளர் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் நிபுணர்களினால் டிஜிட்டல் அடிப்படை வசதி மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வழிகாட்டலினூடாக IoT துறைக்கான ஆவணப்பட உருவாக்கம் 2019 தொடக்கம் 2022 ஆண்டு வரையான காலப்பகுதியை நோக்கமாகக் கொண்டு தேசிய மூலோபாய வழிமுறையின் திட்டமாக திருத்த சட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் இதனை சம்பந்தப்பட்ட தரப்பு நிறுவனங்களின் மத்தியில் விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்தி அதில் பரிந்துரை மற்றும் சிபாரிசுகளை உள்ளடக்கி மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மேம்படுத்தப்பட்ட 2019 -2022 ஆண்டு காலத்திற்கான உபகரணம் தொடர்பான இணையதள மூலோபாய வழிமுறைத்திட்டம் அமைச்சரவை அற்ற டிஜிட்டல் அடிப்படை வசதி மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சின் கோரிக்கைக்கு அமைய அமைச்சரவை புரிந்துகொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆவணத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.
03. தொழில் பாதுகாப்பு ஊழியரின் சுகாதரம் மற்றும் சேமநலன் தொடர்பான உத்தேச புதிய சட்டம் (நிகழ்ச்சி நிரலில் 14ஆவது விடயம்)
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் அப்போதைய கௌரவ தொழில் தொடர்புகள் மற்றும் மனித வள அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான திருத்த சட்ட மூலம் பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை உள்ளடக்கிய திருத்த சட்ட மூலமாக தயாரிப்பதற்காக சட்ட வரைவாளருக்கு சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அல்லாத தொழில் மற்றும் தொழில் தொடர்புகள் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. 1984ஆம் ஆண்டு இல 14 கீழான முக்கியமான ஒளடத கட்டுப்படுத்தும் தேசிய சபை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 16ஆவது விடயம்)
சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முக்கியமான ஒளடத கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் தேசிய சபையை அமைப்பதற்கும் அதற்கு அதிகாரத்தை வழங்குதல் தொடர்பில் அமைக்கப்பட்ட 1984ஆம் ஆண்டு இல 11 கீழான முக்கியமான ஒளடத கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் தேசிய சபை சட்டம் 1986ஆம் இல 41 கீழான மற்றும் 1990 இல 21 கீழான சட்டத்தின் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்டம் உருவாக்கப்பட்ட காலப்பகுதியிலும் பார்க்க தற்பொழுது இதிலும் பார்க்க இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை உள்ளிட்டவை விரிவடைந்துள்ளது. அத்தோடு மருந்துகளை முறைக்கேடாக பாவிப்பதை தடுத்தல் கட்டுப்படுத்துதல் சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வை மேற்கொள்ளுதல் தேசிய கொள்கையை தயாரித்தல் மதிப்பீடு செய்தலுக்கான பொறுப்பான முக்கிய தேசிய நிறுவனமான முக்கிய ஒளடதங்களை கட்டுப்படுத்தும் தேசிய சபையை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும். இதற்காக தேவையான ஒழுங்கு விதிகளை உள்ளடக்கி 1984ஆம் ஆண்டு இல 11 கீழான முக்கிய ஒளடதங்களை கட்டுப்படுத்தும் தேசிய சபை சட்டத்தில் திருத்;தத்தை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிராக செயல்படுவது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளை வலியுறுத்தி செயல்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)
சட்டவிரோத போதைப்பொருள்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் அதிகாரிகளை வலுப்படுத்துவதற்கு கலால் கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. கொஹுவல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்களை நிர்மாணித்தல் தொடர்பாக அங்கேரிய எக்சிமா வங்கியுடன் கடன் உடன்படிக்கையை எட்டுதல்; (நிகழ்ச்சி நிரலில் 28ஆவது விடயம்)
பொதுமக்களுக்கு மிகவும் துரிதமாகவும் பாதுகாப்பானதுமான போக்குவரத்து வசதிகளை செய்யும் நோக்கில் கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்காக ஒப்பந்தக்காரர்களுடன் வணிக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தேiவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிர்மாணப் பணிகளுக்காக தேவையான நிதி நிவாரணத்தை வழங்குவதற்கு அங்கேரிய அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டத்திற்கு தேவையான 52 மில்லியன் யுரோக்கள் நிவாரணக் கடன் தொகையை அங்கேரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் பெற்றுக் கொள்வதற்காக இந்த வங்கியுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. சூறாவளி காற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட கியூபாவைச் சேர்ந்த கிராமமொன்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு 50ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 31ஆவது விடயம்)
கியூபாவிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தியதுடன் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் உருவான இந்த சூறாவளி காற்றின் கரணமாக சேதமடைந்துள்ள அவானாஹி றெக்லாவுக்கு அருகிலுள்ள கிராமமொன்றை புனரமைப்பதற்காக இரு நாடுகளுக்கிடையில் நிலவும் நட்புறவை மேலும் உறுதிசெய்யும் நல்லுறவின் அடையாளமாக இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடத்தில் 60 வருடம் நிறைவடைவதை முன்னிட்டு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாட்டு அலுவலக அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. சர்வதேச உறவுகள், தந்திரோபாய கற்கை நெறிகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம் மற்றும் கியூபா குடியரசின் சர்வதேச தொடர்புகள் குறித்த ராவுல் ரோவா காசியா நிறுவனத்திற்கு இடையில் உடன்பாட்டை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 33ஆவது விடயம்)
இலங்கையின் சர்வதேச தொடர்புகள் மற்றும் மூலோபாய கற்கை நெறிகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனம் கியூபா குடியரசின் வெளிநாட்டு அலுவலக அமைச்சின் சர்வதேச தொடர்புகள் குறித்த ராவுல் ரோவா காசியா நிறுவனத்திற்கு இடையில் கற்கைநெறி மற்றும் புத்திஜீவிகள் புரிந்துணர்வை ஸ்தாபித்தல் மற்றும் மேம்படுத்தும் நோக்குடன் இந்த நிறுவனங்கள் இரண்டுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு அலுவலக அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09.இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் விரிவுரையாளர் பிரிவை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 34ஆவது விடயம்)
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட வைத்திய பீடத்தின் மருத்துவ மாணவர்களுக்கு தங்குமிட பயிற்சிக்காக வசதிகளை வழங்கும் நோக்கில் இரத்தினபுரி மாகாண பெரிய ஆஸ்பத்திரி 2018 ஆம் ஆண்டில் போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டதுடன் இந்த வைத்திய பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு தங்குமிட பயிற்சியை பெற்றுக்கொடுப்பதற்காக தேவையான வசதிகளை செய்வதற்கான தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக 4324.22 மில்லியன் ரூபா முதலீட்டுடன் உத்தேச விரிவுரையாளர் பிரிவு 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியாக நிர்மாணிப்பதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. தேசிய கண் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளர் பிரிவு சத்திர சிகி;ச்சை மற்றும் வார்ட்டுத் தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 35ஆவது விடயம்)
இலங்கையில் அனைத்து கண் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் தேவையான சேவையை வழங்கும் மூன்றாம் நிலை சிகிச்சை சேவை வைத்தியசாலையான இலங்கை தேசிய கண் வைத்தியசாலை தொடர்ந்தும் சர்வதேச தரங்களுக்கு அமைவாக அபிவிருத்தி செய்யும் தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2016 – 2025 ஆம் ஆண்டு தேசிய சுகாதார சேவை மூலோபாய பெருந்திட்டம் என்பதன் கீழ் நாட்டின் உயர்தர வைத்தியசாலை என்ற ரீதியில் பயனாளிகளுக்கு மிகவும் தரமிக்க கண் சிகிச்சை சேவையை வழங்குவதற்கு தேவையான அளவு இடவசதிகளைக் கொண்டதாக வெளிநோயாளர் பிரிவு வார்ட் சத்திர சிகிச்சை நோய் பரிசோதனை பராமரிப்பு வசதிகள் மற்றும் ஏனைய நிவாரண சேவைகளை வழங்குவதற்காக 12 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியொன்று 4565 மில்லியன் ரூபா முதலீட்;டின் கீழ் நிர்மாணிப்பதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்தறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. தெனியாய ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 36ஆவது விடயம்)
தெனியாய ஆதார வைத்தியசாலை அந்த பிரதேசத்தில் உள்ள இரண்டாம் நிலை சிகிச்சை சேவையை வழங்கும் வைத்தியசாலையாவதுடன் அதன் மூலம் சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை 3,50,000 ஆகும். இந்த வைத்தியசாலை மண்சரிவு அச்சுறுத்தலைக் கொண்ட பூமியில் அமைந்துள்ளதினால் அதனை வேறு இடத்தில் அமைக்குமாறு புவி சரிதவியல் ஆய்வு மற்றும் அகழ்வு பணியகத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தற்பொழுது இந்த வைத்தியசாலையில் நிலவும் மனித வள மற்றும் மனித வள எதிர்பார்த்தப்படி பணியாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்காக போதுமானவை அல்ல. இதற்கமைவாக இந்த வைத்தியசாலை 600 கட்டிடங்களைக் கொண்டதாகவும் ஏனைய நவீன வசதிகளைக் கொண்டு புதிய அடிப்படை வசதியுடைய ஆதார வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய ஆதார வைத்தியசாலை தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தினால் அரசாங்கத்திடம் சுவீகரிப்பதற்காக உடன்பட்டுள்ளனர். அத்தோடு உள்ள 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைப்பதற்காக தேவையான காணிக்கான உறுதியில் கைச்சாத்திடுதல் மற்றும் அதற்கு தேவையான ஏனைய வசதிகளை செய்வதற்கும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. அரச பொறிமுறை மற்றும் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு அனுமதி பத்திரம் கொண்டுள்ள நபர்கள் விசாவிற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் விடுவிக்கப்படுவதற்காக இலங்கை மற்றும் எல்சல்வடோர் குடியரசிற்கு இடையில் புரிந்துணர்வை எட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 42ஆவது விடயம்)
இலங்கை மற்றும் எல்சல்வடோர் குடியரசிற்கு இடையில் பிரஜைகளுக்கு அன்னியோன்னிய அடிப்படையில் போக்குவரத்து வசதி செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட வழிமுறைகளை விரிவுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையில் நட்புறவு தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அரச இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கடவுச்சீட்டு கொண்டுள்ள நபர்கள் விசா அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதில் இருந்து விடுவித்தல் மற்றும் அவ்வாறு பிரவேசிக்கும் பிரஜைகளுக்கு விசா அனுமதி பத்திரமின்றி நாட்டில் 30 வருடம் தங்கியிருப்பதற்கு அனுமதியை வழங்குவதற்காக இலங்கை மற்றும் எல்சல்வடோர் குடியரசுக்கிடையில் எட்டப்படவுள்ள உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு உள்ளக மற்றும் நிர்வாக அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களின் பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. குளியாப்பிட்டி மேற்கு செயலாளர் அலுவலகத்திற்காக அரச சேவை உள்ளக விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 43ஆவது விடயம்)
அரச ஊழியர்களில் பெரும்பாலானோர் வாழும் குருநாகல் மாவட்டத்திற்குள் உள்ள அரச ஊழியர்களினால் தமது விளையாட்டுத் தேவையை பிரதேசத்தில் அமைத்தல் அரச சேவை விளையாட்டு கழக வளவில் அமைக்கும் வசதியைப் பயன்படுத்துவதுடன் அவற்றுக்கு மிகவும் தேவையான குறைந்த வசதிகளைக் கொண்டதாகும். இதற்கமைவாக இந்த விளையாட்டு கழக வளவில் பட்மின்;டன் மைதானமொன்று டெனிஸ் மைதானமொன்று புல் / ஸ்லுக்கர் மேசை ஸ்கொட்ச் பிரிவு நீச்சல் தடாகம் சிற்றுண்டிச்சாலை பணியக வளவொன்று மகாநாட்டு வசதி மற்றும் உடற்பயிற்சி கலை உள்ளடக்கிய முழுமையான விளையாட்டு மைதானமொன்றாக அபிவிருத்தி செய்வதற்காக தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காக உள்ளக மற்றும் வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக உள்ளக மற்றும் வெளிநாட்டு தொடர்புகளுக்காக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களின் பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. வண்டல் மண்ணை அகற்றுதல் மற்றும் சுத்தம் செய்தல் மூலம் பேர வாவியை சுத்தம் செய்வதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 48ஆவது விடயம்)
தற்பொழுது பேர வாவிக்கு அருகாமையில் உள்ள பிரதேசம் வணிக மற்றும் தங்குமிடமில்லாத மத்திய நிலையம் என்ற ரீதியில் பயன்படுத்தப்படுவதுடன் அதனை அண்டியுள்ள சுற்றாடல் மிகவும் சிறப்பான முறையில் கவரக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட குளத்தின் நீரின் கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கில் 800 மில்லியன் ரூபா முதலீட்டுடன் பேர வாவியிலுள்ள வண்டல் மண்ணை அகற்றுதல் பேர வாவியின் வான் கதவுகள் புனரமைத்தல் நீரின் தரத்தை பரிசோதித்தல் மற்றும் பேர குளத்தின் கழிவுபொருட்கள் கொட்டப்படுவதை தவிர்த்தல்; உள்ளிட்ட திட்டங்கள் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. மெனராகலை மாவட்ட விளையாட்டு கட்டிடத் தொகுதி மற்றும் உள்ளக விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 5ஆவது விடயம்)
மொனராகலை மாவட்ட அபிவிருத்தியின் புதிய முன்னேற்ற நடவடிக்கையாக இந்த மாவட்டத்தில் வாழம் மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் எதிர்கால பரம்பரையினரின் விளையாட்டு ஆற்றல்களை நாட்டிற்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன் மாவட்ட விளையாட்டுக் கட்டிடத் தொகுதி மற்றும் உள்ளக விளையாட்டு மைதானம் மொனராகலை குமாரவத்தை தோட்டத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ள 10 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காக அரச நிர்வாகம் இடர்முகாமைத்துவ மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ அவர்களும் சமர்ப்பித்த கூட்டு ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் பாதுகாத்தலுக்கான சட்டத்திற்கு பதிலாக சட்டமொன்றை அறிமுகப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 61ஆவது விடயம்)
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் பாதுகாக்கும் சட்டம் 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டதுடன் அதனை வலுவூட்டி குற்றச் செயல்களைப் புரிந்தோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பது தொடர்பில் சர்வதேச தரத்திற்கு மற்றும் நடைமுறைக்கமைவாக தேவையான ஒழுங்குவிதிகளை உள்ளடக்கி புதிய திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் 2015 இல 4 கீழான குற்ற... சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் பாதுகாப்பதற்காக சட்டத்தை மாற்றுவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலை அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக டெப் கணினியைப் பெற்றுக் கொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 63ஆவது விடயம்)
உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்காக அவர்களுக்கு டெப் கணினிகளை பெற்றுக் கொடுப்பதற்கு 2017ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தி 2019 ஆண்டு தரம் 12 இல் உயர்தரத்தை தொடர்வதற்காக உள்வாங்குவதற்காக மாணவர் மற்றும் சம்பந்தப்பட்ட கற்கை நெறியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு டெப் கணினிகளை பெற்றுக் கொடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. 2007 ஆம் ஆண்டு இல 26 இன் கீழான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 64ஆவது விடயம்)
அரச மொழிக் கொள்கையை நடைமுறையில் முன்னெடுக்கும் நோக்கில் 2007 ஆம் இல 26 கீழான தேசிய மொழிக் கொள்கை மற்றும் பயிற்சி நிறுவன சட்டத்தின் மூலம் தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சிங்களம், தமி;ழ், ஆங்கில மொழியை கற்பிப்பதற்காக ஆசிரியர்களை உருhக்குதல் மொழி மற்றும் மொழிபெயர்பாளர்களை உருவாக்குதல் நடைமுறை ஆற்றலுடையவர்களை பயிற்றுவித்தல் இதன் நோக்கமாகம். அவ்வாறு இருந்த போதிலும் தற்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் நிறவனங்களை அமைப்பதற்கு மிகவும் விரிவான வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக ஏனைய உயர் கல்வி நிறுவனங்களுடன் சர்வதேச தொடர்புகளை முன்னெடுத்து கற்கை நெறிகளை நடைமுறைப்படுத்துதல், பிரதேச ரீதியில் மொழி பயிற்சி கற்கை நெறியை மேற்கொள்ளுதல் மற்றும் பிரதேச மத்திய நிலையத்தை அமைப்பதற்காக பல்வேறு வசதிகளை செய்தல் 2007 இல 26 இன் கீழான தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் மற்றும் பிரதேச பயிற்சி மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பதற்காக ஒழுங்கு விதிகளை கவனத்தில் கொண்டு 2007 இல 26 கீழான தேசிய மொழிக் கல்வி மற்றும்; பயிற்சி மத்திய நிலைய சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழி சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்தற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19.எக்ஸ்போ 2020 டுபாயில் இலங்கையின் ஒத்துழைப்புடன் (நிகழ்ச்சி நிரலில் 65ஆவது விடயம்)
வேல்ட் எக்ஸ்போ என்ற 5 வருடத்துக்கு ஒரு முறை 6 மாதகால முழுவதும் நடத்தப்படும் மிகவும் பிரபல்யம் மற்றும் பாரிய கண்காட்சிகளில் ஒன்றானதுடன் இதன் 2020 ஆம் ஆண்டின் கண்காட்சி டுபாயில் நடத்தப்படவுள்ளது. இந்த கண்காட்சியில் கலந்துக்கொள்வதன் மூலம் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்தல் மற்றும் ஆற்றல்களை காட்சிப்படுத்தி வர்த்தகம் சந்தை பங்கு மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் நேரடி வெளிநாடு முதலீடு மற்றும் தொழிநுட்பங்களை பரிமாறுவதற்கும் தகவல் தொழில்நுட்பம் போக்குவரத்து சுற்றுலா தொழிற்துறை மற்றும் ஏனைய சேவைகளை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை கருத்தில் கொண்டு இந்த கண்காட்சியில் கலந்துக்கொள்வதற்கு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் இதற்கு தேவையான ஏனைய வசதிகளை மேற்கொள்வதற்குமாக அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்கள் சமர்ப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20.ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்காக லண்டன் ஹித்ரோ தொடக்கம் - உணவு வகைகள் உள்ளிட்டவற்றை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 69ஆவது விடயம்)
லண்டன் ஹித்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்குட்பட்ட விமானங்களுக்கு தேவையான உணவு வகைகள் உள்ளிட்டவற்றை 3 வருட காலத்துக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய Newrest Catering Services நிறுவனத்திடம் 4.5 மில்லியன் யூரோக்களுக்கு வழங்குவதற்கான நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21.ஸ்ரீலங்கள் விமான நிறுவனத்தின் விமானங்களுக்கு சவுதி அரேபியாவில் தமாம் விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருளை விநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 70ஆவது விடயம்)
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்காக 2019ஆம் ஆண்டு ஜீலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் சவுதி அரேபியாவில் தமாம் விமான நிலையத்தில் விமான எரிபொருளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 2.0 மில்லியன் டொலர்களுக்கு M/s. Modern Consortium for Refueling Aircraft Co.Ltd (MCRA) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22.சப்புகஸ்கந்த மின் அனல் நிலையத்தின் 2ஆவது மின் உற்பத்தி இயந்திரத்தில் அத்தியாவசிய திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 71ஆவது விடயம்)
சப்புகஸ்கந்த மின் அனல் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரம் உரிய முறையில் செயற்படுவதற்காக அதன் இரண்டாம் மின் உற்பத்தி இயந்திரத்தின் இயற்கை செயற்பாட்டை 24,000 மணித்தியாலங்கள் அளவில் மேற்கொள்ளக்கூடிய முக்கிய திருத்த வேலைக்காக தேவையானவற்றை கொள்வனவு செய்வதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய அதன் ஆரம்ப தயாரிப்பாளர்களான பிரான்ஸின் MAN Energy Solution என்ற நிறுவனத்திடம் 1.8 மில்லியன் யூரோக்களுக்கு வழங்குவதற்கான மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23.உயர் தரத்துடனான ஆடம்பர நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தல் மற்றும் புதிய திட்டத்துக்காக ஆலோசனை சேவையை ஏற்படுத்தல்; (நிகழ்ச்சி நிரலில் 74 ஆவது விடயம்)
உயர் தரத்துடனான ஆடம்பர நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு இது வரையில் பூர்த்தி செய்யப்படாத திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மாநகர வணிக கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல், ஹட்டன் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல், மற்றும் நிர்மாணித்தல் அவிசாவளை மனமேந்திரா வீதியை மேம்படுத்துதல், சுமனகீர்த்தி மகா பிரிவெனாவின் உத்தேச மாடி கட்டிடத்தை நிர்மாணித்தல், மீவித்தி கம்மன நாலிகாராமயேவின் உத்தேச மாடி கட்டிடத்தை நிர்மாணித்தல், இரத்தினபுரி சப்ரகமுவ சமன் மகா தேவாலயத்தில் உள்ளக நிர்மாண பணிகளை மேற்கொள்ளுதல், எம்பிலிபிட்டிய காவன் திஸ்ஸ குள நகர பூங்கா களுத்துறை பொது வர்த்தக சந்தையை நிர்மாணித்தல், அநுராதபுரம் புனித நகரில் இயற்கை கழிவறை வசதிகளை ஏற்படுத்துதல், முல்லைத்தீவு அடிப்படை வசதி அபிவிருத்தி, குச்சமங்குளம் குள பொழுதுப்போக்கு பிரதேசத்தை அமைத்தல், கொட்டாவ தளகல வீதி அபிவிருத்தி மற்றும் கிரிமண்டல மாவத்த அபிவிருத்தி போன்ற திட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டிடப் பணிகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனத்தை அங்கீகரித்தல் மற்றும் மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 79ஆவது விடயம்)
வருடாந்தம் 1,50,000 க்கு மேற்பட்ட மாணவர்கள் தேசிய பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் இணைந்துக் கொள்வதற்கான தகுதிகளை பெற்றப்போதிலும் தேசிய பல்கலைக்கழகங்களில் நிலவும் வசதி வரையறைக்குட்பட்டதினால் 1,25,000 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இதற்கு தீர்வாக அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் உயர் கல்வி நிறுவன அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு (AHEAD) என்ற திட்டத்தில் உள்ள சேமிக்கப்பட்டதை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனத்துக்கு தேவையான வசதிகளை செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தின் பல்கலைக்கழக கட்டமைப்புக்காக பிரவேசிப்பதற்கான வரத்தை பெறாத உயர் தரத்தில் சித்தி எய்தியவர்களின் உயர் கல்விக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு உயர் கல்வியை விரிவுப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடு அதாவது (AHEAD) என்ற திட்டத்தில் உள்ள சேமிக்கப்பட்டதை பயன்படுத்தி என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனத்துக்கு நிதியை பெற்றுக்கொடுத்தல் மற்றும் இந்த வேலைத்திட்டத்தை கண்காணிப்பதற்கான அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனரமைப்பு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. கிழக்கு மாகாணத்தில் 845.83 கிலோமீற்றர் வீதியை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 84ஆவது விடயம்)
கிராமிய பிரதேசம் மற்றும் சமூக பொருளாதார மத்திய நிலையத்துக்கிடையில் நுழை வீதியை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் 2 ஆவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அம்பாறைக்குள் 5 திட்ட பொதிகளின் கீழ் 408.62 கிலோமீற்றர் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் 3 திட்ட பொதிகளின் கீழ் 221.28 கிலோமீற்றர் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 3 திட்டப் பொதிகளின் கீழ் 215.93 கிலோமீற்றர் கிராம வீதிகளை அபிவிருத்தி மற்றும் பராமரிக்கப்படவுள்ளன. இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்துக்கான ஒப்பந்தம் அதாவது 1 மற்றும் 2 பொதிகளுக்கான ஒப்பந்தம் M/s NEM என்ற நிர்மாண பணி நிறுவனத்துக்கும் பொதி மூன்றுக்கான ஒப்பந்தம் M/s AMSK-CHEC உடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு வர்த்தகத்திடமும் பொதி 4 இற்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட்ட மாகா பொறியியல் தனியார் நிறுவனத்திடமும் பொதி 5 இற்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட்ட நவலோக்க கன்ஸ்ட்றக்சன் தனியார் நிறுவனத்திடமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் 1 மற்றும் 2 பொதிகளுக்கான ஒப்பந்தம் சீனாவின் (Chongqing International Corporation China) நாலும் Sun Constructions உடனும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட கூட்டு வர்த்தகத்திடமும் பொதி 3 இற்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட்;ட நவலோக்க கன்ஸ்ட்றக்சன் நிறுவனத்திடமும் திருகோணமலை மாவட்டத்தில் 1 மற்றும் 3 பொதிகளுக்கான ஒப்பந்தம் எட்வேர்ட் என்ட் கிரிஸ்டி என்ற நிறுவனத்திடமும் பொதி 2 இற்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட்ட மாகா இன்ஞினியரிங் நிறுவனத்திடமும் வழங்குவதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. எதிர்வரும் எட்டு (8) மாத காலப்பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் இறக்குமதிக்காக நீண்டகாலத்துக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 85ஆவது விடயம்)
2019.07.15 தொடக்கம் 2020.03.14 வரையிலான எட்டு (8) மாத காலப்பகுதிக்கு தேவையான டீசல் (ஆகக்கூடிய சல்பர் சதவீதம் 0.05) 4,20,000 பீப்பாக்கள் டீசல் ( ஆகக்கூடிய சல்பர் சதவீதம் 0.05) 10,40,000 பீப்பாக்கள் மற்றும் பெற்றோல் (92UNL) 10,84,000 பீப்பாக்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விஷேட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய சிங்கபூரின் MS – Vitol Asia என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27.அரச ஊழியர்களின் சீருடை (நிகழ்ச்சி நிரலில் 86ஆவது விடயம்)
அரச நிர்வாக விடயம் வழங்கப்பட்டுள்ள அமைச்சில் செயலாளரிடம் நிறுவன - மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைவாக அரச ஊழியர்களின் சீருடை குறித்த சுற்றறிக்கை ஒன்று 2019.05.29 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரச நிர்வாகத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள பல்வேறு உத்தரவுகளை கவனத்தில் கொண்டு மேலே குறிப்பிடப்படும் சுற்றறிக்கையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரச ஊழியர்களின் பணி நேரத்தில் தமது அலுவலகத்துக்கு வரும் பொழுது ஆண் ஊழியர்கள் காற்சட்டை மற்றும் சேர்ட் அல்லது தேசிய சீருடையுடன் இருப்பதுடன் பெண் ஊழியர்கள் சாரி, ஒசரி அல்லது அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பொருத்தமான சீருடையை அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் எப்பொழுதும் ஊழியர்களின் முகம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதுடன் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு தடை ஏற்படாத வகையிலான சீருடையாக இருக்க வேண்டும் என்பது போன்ற ஒழுங்கு விதிகளை உள்ளடக்கி சுற்றறிக்கையை ஆலோசனையை வெளியிடுவதற்காக அரச நிர்வாகம் இடர் முகாமைத்துவம் மற்றும் கிராம பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.