தாக்குதலில் உயிரிழந்தவரின் ஜனாசா வீட்டுக்கு அமைச்சர் ரிசாத் தலைமையிலான குழுவினர் சென்றனர்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
புத்தளம் மாவட்டம் கொட்டரமுல்ல தாக்குதலில் இன்று இரவு உயிரிழந்த அல்அக்ஸா மாவத்தை முதலாவது வீதியில் வசிக்கும் பௌசுல் அமீர்டீனின் ஜனாசா வீட்டுக்கு இன்றைய (14)தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
தங்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.

இதில் காடையர்களினால் தாக்குதலுக்கு உள்ளான குடும்பங்களை சந்தித்து ஆறுதலும் கூறினார் அமைச்சர் றிசாத் பதியுதீன்.
இதில் அப்பகுதியை சேர்ந்த பௌத்த மதகுரு மற்றும் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -