வாழைச்சேனை ஆயிஷா மாணவி ஜுமைனா ஹானி தேசிய போட்டிக்கு தெரிவு...

எச்.எம்.எம்.பர்ஸான்-

ரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 170 புள்ளிகளும் அதற்கு மேலும் பெற்ற மாணவர்களை உள்ளடக்கி நடைபெற்ற விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி ஜே. ஜுமைனா ஹானி பங்குபற்றி தேசிய ரீதியில் நடைபெறவுள்ள போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த மாணவி கல்வியிலும் புறக்கீர்த்திய செயட்பாடுகளிலும் மிகவும் ஆர்வம் கொண்டவர். வலய, மாகாண மற்றும் தேசிய ரீதியாக இடம்பெற்ற பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி இவர் பாடசாலைக்கும் பிரதேசத்திக்கும் பெருமை சேர்த்துத் தந்துள்ளார்.

அத்தோடு கடந்த வருடம் இடம்பெற்ற தேசிய மீலாத் போட்டியில் இவர் பேச்சுப் போட்டியில் பங்குபற்றி தேசியத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இதேபோன்று தற்போதைய போட்டியிலும் சிறந்த முறையில் கலந்து கொண்டு சாதனையினை நிலைநாட்டப் பிரார்த்திப்பதோடு குறித்த மாணவியை பயிற்றுவித்த விஞ்ஞானப் பாட ஆசிரியை திருமதி கே.ஆர்.எப்.இஸாரா மற்றும் வகுப்பாசிரியர் எம்.சீ.எம்.றியாஸ் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்று அதிபர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -