ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் புதன்கிழமை (29) இடம்பெற்றது.
ஒவ்வொரு புதன்கிழமையும் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் இம் மக்கள் சந்திப்பில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ஆளுநரின் கவனத்திற்கு இம்முறை தத்தமது பிரச்சினைகளை முன்வைத்தனர்.இந்த பொதுமக்கள் சந்திப்பித்தின்போது பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் எழுத்துமூலம் வழங்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு ஆளுநரினால் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
மேலும் வீதி அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி தொடர்பாக சில கோரிக்கைகளை இச் சந்திப்பின் போது மக்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.