இந்த‌ குண்டு வெடிப்பு கார‌ண‌மாக‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் மீதான‌ ப‌ல‌ குற்ற‌ச்சாட்டுக்க‌ள் பொய்யான‌வை என‌ நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.


மேற்ப‌டி தேடுத‌ல்க‌ளில் நாம் க‌ண்ட‌வை.

1. குண்டு வெடிப்பை தொட‌ர்ந்து கிழ‌க்கில் உள்ள‌ அனைத்து முஸ்லிம் ஊர்க‌ளும், அனைத்து வீடுக‌ளும், ப‌ள்ளிவாய‌ல்க‌ளும், க‌டைக‌ளும் பாதுகாப்பு ப‌டையின‌ரால் ச‌ல்ல‌டை போட்டு தேடியும் ஸ்ஹ‌ரானுடைய‌ ஓரிரு ஆட்க‌ளும் அவ‌ர்க‌ளின் குண்டு த‌யாரிப்புக்கான‌ பொருட்க‌ளுமே பிடிப‌ட்டுள்ள‌ன‌. அவை த‌விர‌ ஏனைய‌ ஊர்க‌ளில் சில‌ த‌னிந‌ப‌ர்க‌ள் துப்பாக்கி, துப்பாக்கி ர‌வை, க‌த்திக‌ளும் வாள்க‌ளும் த‌விர‌ வேறு எந்த‌ தீவிர‌வாத குழுவும் குண்டுக‌ளுட‌ன் பிடிப‌ட‌வில்லை.

2. ஸ்ஹ‌ரான் என்ப‌வ‌ரின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் சில‌ரை த‌விர‌ வேறு குழு ரீதியாக‌ ஆயுத‌ம் தாங்கிய‌ எந்த‌ தீவிர‌வாத‌ முஸ்லிம் குழுவும் கிழ‌க்கில் இல்லை பிடிப‌ட‌வில்லை என்ப‌தால் அவ்வாறான‌ முஸ்லிம் ஆயுத‌ குழு இல்லை என்ப‌து நிரூப‌ண‌மாகியுள்ள‌து.

3. ச‌ம்பிக்க‌ ர‌ண‌வ‌க்க‌ 2000ம் ஆண்டு முத‌ல் சொல்லிவ‌ருகிறார் கிழ‌க்கில் ஆயுத‌க்குழுக்க‌ள் இருப்ப‌தாக‌. 2000ம் ஆண்டில் ஸ‌ஹ்ரானின் வ‌ய‌து சுமார் 15. ஆக‌வே அந்நாளில் வேறு ஆயுத‌ குழுக்க‌ள் இருந்திருந்தால் இந்த‌ தேடுத‌லில் பிடி ப‌ட்டிருப்ப‌ர். நாட்டில் தீவிர‌வாதிக‌ள் 200 பேர் அள‌வில் உள்ள‌தாக‌ அமைச்ச‌ர் ச‌ம்பிக்க‌ த‌ற்போது அறிவித்துள்ளார். அவ‌க‌ளும் ஸ‌ஹ்ரானின் ஆட்க‌ள்தான். ஆக‌ கிழ‌க்கில் பெரும் ஆயுத‌ முஸ்லிம் குழுக்க‌ள் உள்ள‌தாக‌ ச‌ம்பிக்க‌வும், ஹாம‌துருமாரும் சில‌ த‌மிழ் இன‌வாதிக‌ளும் இன்று வ‌ரை சொன்ன‌வை பொய் என‌ நிரூப‌ண‌மாகியுள்ள‌து.

4. புலிக‌ள் தோல்வியுற்று நாட்டை விட்டு ஓடிய‌ போது கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ளிட‌ம் த‌ம‌து ஆயுத‌ங்க‌ளை விற்றுவிட்டு ஓடிய‌தாக‌ முன்னாள் விடுத‌லைப்புலி உறுப்பின‌ர் க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் க‌ருத்து தெரிவித்திருந்தார். அவ்வாறு புலிக‌ளின் ஆயுத‌ம் எதுவும் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளிட‌ம் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ அர‌சு அறிவிக்க‌வில்லை. இத‌ன் மூல‌ம் முன்னாள் புலி உறுப்பின‌ர் ப‌ச்சைப்பொய்யை சொல்லியுள்ளார் என்ப‌தும் நிரூப‌ண‌மாகிற‌து.

முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -