கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை பொலிஸ் அத்தியட்சகரின் சார்பில் கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.வாஹித், கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் உட்பட இப்பகுதியில் இயங்கி வருகின்ற வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் முகாமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் வங்கிகள் மற்றும் நிறுவனங்களினதும் அவற்றின் ஊழியர்களினதும் வாடிக்கையாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலான விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டன.
இதன்போது வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் முகாமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட கருத்துகளும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டதுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு ஒழுங்குகள் குறித்து கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களும் பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.வாஹித் அவர்களும் பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.
கல்முனையில் அரச, தனியார் வங்கிகள் உட்பட சுமார் 40 நிதி மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.