முறைகேடான முகப்பூச்சு (கிறீம்) விற்பனை செய்தவர்கள் கைது

நீர்க்கொழும்பு பகுதியில் காலாவதியான முகப்பூச்சுக்களை (கிறீம்) கொள்வனவு செய்து அவற்றை மிக சூட்சுமமான முறையில் நாடு முழுவதும் விநியோகித்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்குருகாரமுள்ள பகுதியில் நேற்று திங்கட்கிழமை நீர்க்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்த பொலிஸார் அங்கிருந்து காலாவதியான முகப்பூச்சுக்கள் (கிறீம்), அழகு சாதன பொருட்கள் , அவற்றை பொதி செய்ய பயன்படுத்திய பெட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

மேலும் சந்தேக நபர் மிக சூட்சுமமான முறையில் காலாவதியான முகப்பூச்சுக்களை கொள்வனவு செய்து அவற்றை புதிய பெட்டிகளுக்குள் அடைத்து , அதன் காலாவதி தினங்களையும் மாற்றி வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய அழகு சாதனப் பொருட்களாக விநியோகம் செய்து வந்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நாடுபூராகம் குறித்த காலாவதியான அழகு சாதன பொருட்களை விநியோகம் செய்தமை தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீர்க் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -