2016ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதி


2016ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களையும் அக்ரஹார காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திறைசேரி மற்றும் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சனத் ஜி டி சில்வா தெரிவித்தார். இதன்மூலம் இந்த வருட இறுதிக்குள் 2016ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்ற சுமார் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் அரச ஊழியர்கள் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்வர். வைத்தியசாலை செலவினங்களுக்கு மேலதிகமாக வைத்தியசாலையில் தங்கியிராமல் சிகிச்சை பெறும் செலவினங்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -