சாய்ந்தமருது வீட்டில் நடந்தது என்ன புகைப்படங்களுடன் விபரம்.நேற்று (26) இரவு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அங்கு 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, அவர் தனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த வீட்டை சோதனை செய்வதற்காக நெருங்கிய வேளையில், குறித்த வீட்டிலிருந்து பொலிசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, வீட்டினுள் இருந்த தற்கொலை தாக்குதல்தாரிகளினால் குண்டு வெடிப்புகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரால் குறித்த பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதோடு, குண்டுவெடிப்பு இடம்பெற்ற வீடும் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது வீட்டினுள் தற்கொலை தாக்குதல்தாரிகள் என கருதப்படும் மூவரின் சடலங்களும் பெண்கள் மூவரின் சடலங்களும் ஆறு சிறிய குழந்தைகளின் சடலங்களும் வீட்டிற்கு அருகில் வீட்டிற்கு வெளியே தற்கொலை தாக்குதல்தாரிகள் என சந்தேகிக்கப்படும் மேலும் மூவரின் சடலங்கள் உள்ளிட்ட 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் பாதுகாப்பு பிரிவினர் குறித்த வீட்டிற்குள் நுழையும் போது படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணொருவரும் குழந்தை ஒன்றையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று பெறுவதோடு நேற்று இரவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -