கவிதைவாதம் செய்ய நேரமில்லை
தீவிர வாதமதை ஒழித்துக்கட்டி

நாட்டை மீட்டெடுக்க
கரம் கோர்ப்போம் வா தோழா

வாதம் செய்ய நேரமில்லை
பிடி வாதமதை விட்டுவிட்டு
இனவாதமை அழித்திடுவோம்
தாமதமின்றி வா தோழா

வாதம் செய்ய நேரமில்லை
இனவாதம் கக்கி நாற்றமது
மூக்கை எட்டுமுன்
சுத்தம் செய்து நாட்டை மீட்டெடுப்போம் வா தோழா

வாதம் செய்ய நேரமில்லை
பேதமின்றி ஒன்றுபட்டு
சதிகாரனின் முகமதில்
உமிழ்ந்து விட்டு தொடருவோம்
எம் உறவினை வா தோழா

வாதம் செய்ய நேரமில்லை
சமாதானமதை கையில் ஏந்தி
சுமூகமாய் வாழ்ந்திடுவோம்
நீ வா தோழா

கிடைக்கும் சந்தர்ப்பமெல்லாம்
வாதம் பேசி எமை தீனியாக்கும்
கயவர் கூட்டமதை தோற்கடித்து

எம் உறவினை காத்திடுவோம் 
வா தோழா

போதும் புகையினை சுவாசித்து
நெருப்பினில் பொசுங்கி
வீடும் நாடும் சுடுகாடாய் 
மாறியது போதும்

இனியும் இடமளியோம்
எம் இனிய தேசமெங்கும்
பூக்கள் மலரட்டும் 
சமாதானம் சிரகடிக்கட்டும் 
நீ வா தோழா.. 

நம் நாடு 
நம் உறவு
நம் வாழ்வு
ஒன்றாய் சேர்ந்தே மீட்டெடுப்போம்
அமைதியால் வென்றெடுப்போம் 
வா தோ ழா

முகவரிக் கவிஞன்..இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -