சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் புத்தாண்டு சேமிப்பு வாரம் ஆரம்பம்

றியாத் ஏ. மஜீத்-
மிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 'எங்களை பாதுகாப்போம் சேமிப்பை ஊக்குவிப்போம்' எனும்தொனிப்பொருளிலான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் இம்மாதம் 16ம் திகதி தொடக்கம் 29ம் திகதிவரையான புத்தாண்டு சேமிப்பு வாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று காலை (16) செவ்வாய்க்கிழமைசாய்ந்தமருது சமுர்;த்தி சமுதாய அடிப்படை வங்கியில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது சமுர்;த்தி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டுபுத்தாண்டு சேமிப்பு வாரத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், சமுர்;த்திசமுதாய அடிப்படை வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா, கருத்திட்ட முகாமையாளர்ஏ.எம்.அப்துல் கபூர், கருத்திட்ட உதவியாளர் எம்.எம்.எம்.முபாறக், உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத்உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -