நீண்டகால அகதிகளின் பிரச்சினை தீர, மீண்டுமொரு அமைச்சரவை பத்திரம்.


இரு வார காலத்தினுள் தரவுகளை கோருகிறார் அமைச்சர் றிஷாட்.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ரிஷாட்பதியுதீன், தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக்கட்சி, அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் உதவ வேண்டும் எனவும் பகிரங்கவேண்டுகோள் விடுத்தார்.
மீள் குடியேறாத மக்களின் காணிப்பிரச்சினை, வீ ட்டுப்பிரச்சினை மற்றும் மலசலகூடப்பிரச்சினை, குறித்த தரவுகளைசேகரித்து பட்டியலிட்டு இரண்டு வார காலத்தினுள் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.அத்துடன் அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகள் மாத்திரமின்றி ஜம்மியத்துல் உலமா உட்பட சமூகம் சார்ந்த சிவில் அமைப்புக்கள்,நிறுவனங்களும் இதற்கு உதவேண்டும் என அவர்மேலும் கோரினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -