கிண்ணியாவில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு பொது நிகழ்வுகளுக்கும் தடை


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுமாறு கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் கட்டளை பிறப்பித்துள்ளார்.
இதற்கான அறிவித்தலை இன்று (22) திங்கட் கிழமை கிண்ணியாவில் உள்ள சகல பள்ளிவாயல்களிலும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது .

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ் நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது நிகழ்ச்சிகள், மைதான விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட சகல விடயங்களிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறும் கடிதம் மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை கிண்ணியா நகர சபையின் சட்ட திட்டங்களை மதித்து நடக்குமாறும் மேலும் குறித்த அறிவித்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -