அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்கான மருந்து வகைகள் அனுப்பி வைப்பு


ம்பாறை மாவட்டத்தில் நிலவும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அவசர தேவை ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக தேவையான மருந்து வகைகள் ஒரு தொகை சிகிச்சை உபகரணங்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு விரைவாக வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை பெரியாஸ்பத்ரி கல்முனை ஆதார வைத்தியசாலை கல்முனை அஷ்ரப் பெரியாஸ்பத்ரி ஆகியவற்றுக்கும் பிரதேச மருந்தக கலஞ்சியசாலைகளுக்கும் இவை கடந்த சனிக்கிழமை இரவே அனுப்பப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் யாசிங்க தெரிவித்தார். மேலும் மருந்து வகைகள் தேவைப்படும் பட்சத்தில் கொழும்பு வைத்திய விநியோகப் பிரிவில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் அனைத்து வைத்தியசாலை பணியாளர்களும் உடனடி சேவைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -