இலங்கை வாழ் மக்களிடம் ஓர் உருக்கமான வேண்டுகோள்!


-அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத்-
ந்த நெருக்கடியான சூழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை நிறுத்துவோம்; தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் ஏலவே கண்டு கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தவறியமை நாம் அனைவரும் விட்ட மாபெரும் வரலாற்றுத் தவறாகும்.

எமது அசமந்தப் போக்கின் விளைவாக விலைமதிக்க முடியாத பல அப்பாவி மனித உயிர்களை இழந்து தவிக்கின்றோம்.
இனி, உடன் செய்ய வேண்டிய விடயங்களில் கவனத்தைக் குவிப்போம்.

இலங்கையர் என்ற வகையில் பேதங்களை மறந்து இருதய சுத்தியுடன் ஒன்றிணைவோம்; தீவிரவாத விஷக் கிருமிகளை அடையாளம் கண்டு துடைத்தெறிவோம்.
நம் தாய் மண்ணை காப்பாற்ற, நாளைய தலைமுறையினர் இம்மண்ணில் அமைதியாக வாழ்வதை உத்தரவாதப்படுத்த அர்ப்பணிப்புடன் களமிறங்குவோம்; செயற்படுவோம்; சாதிப்போம்.

அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -