சுகாதார இராஜங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதைத் திறந்து மக்களின் பாவனைக்குக் கையளித்தார்.
மத்தியமுகாம் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.எல்.பீ.நுவான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.வீ.நவாஸ், நாவிதன்வெளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, மத்தியமுகாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜயசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.சீ.நிஸார், நாவிதன்வெளி பிரதேச உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் மக்களின் சுகாதார சேவையை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தினை பாராட்டி பைசல் காசிம் மத்தியமுகாம் பிரதேச மக்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.