எமது தேசத்தின் தேசியக்குரலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் வசதி குறைந்த குடும்பங்களுக்கான வாழ் வாதார உதவிகளை இன்க்ஷா அல்லாஹ் எதிர்வரும் 31-03-2019 ஞாயிறன்று மு.ப. 08:00 மணிக்கு, கௌரவ தேசியத்தலைவர் ரிக்ஷாட் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்வுக்கான மீழ் குடியேற்றம்,கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து நேரடியாக வழங்கும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
அக்கரைப்பற்று -05 வெள்ளப்பாதுகாப்பு வீதியில் அமைந்திருக்கும் மாஸ்ட்டர் வூட் ( MASTER WOOD )தொழில் நிறுவனத்துக்கு அருகாமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில்
கௌரவ அதிதிகளாக ....அல்-ஹாஜ் அமீர் அலி - கிராமிய வீடமைப்பு மற்றும் கடற்றொழில், நீரியல் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ,
பேராசிரியர் அல் - ஹாஜ் எஸ். எம்.எம். இஸ்மாயில் - பாராளுமன்ற உறுப்பினர் ,
அல் - ஹாஜ் சிராஸ் மீராசாஹிப் - தேசிய கைத்தொழில் அதிகார சபை தலைவர் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
தொழிலதிபர் அப்துஸ்ஸமது அப்துல் பாசித் J.P. (MASTER WOOD ) அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில்...
மேலும் உயர் அதிகாரிகள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சிப்போராளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பயனாளிகளின் உள்ளங்கள் சந்தோக்ஷமடையும் இந்த பொன்னான நிகழ்வில் கட்சி பேதம் பாராது எல்லோரும் கலந்து சிறப்பிக்க வேண்டுகின்றனர் இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டுக்குழுவினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -