கல்முனை டொக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம்

எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன்-
ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 1990 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தர கணித , விஞ்ஞான , கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்திருந்த அந்த குழு மாணவர்களுக்கான இலவச “ஸ்மாட்” மருத்துவ சிகிச்சை முகாம் கல்முனை டொக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று ( 3 ) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பொது வைத்தியம் , கண் பரிசோதனை , ஈ.சீ.ஜீ. பரிசோதனை , இரத்தப் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இக்குழுவில் கல்வி கற்ற உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் , இப்பிரதேசத்தின் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் , பல்துறை நிபுணர்கள் , வங்கி உத்தியோஸ்தர்கள் , தபால் திணைக்கள அதிகாரிகள் , பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , தொழில் அதிபர்கள் , தனியார் நிறுவன உத்தியோஸ்தர்கள் , அரச உத்தியோஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -