காத்தான்குடி ஆதார வைத்தியசாலை,மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் அவர்களுக்கும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் கடந்த வாரம் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது மேற்படி வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் காத்தான்குடி தள வைத்தியசாலையில் ஆளணி தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும்,ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக்குழு யு.எல்.எம்.என்.முபீன் அவர்களூடாக அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்த விடயத்தை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்த யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் அமபியுலன்ஸ் வண்டி வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் இந்த வைத்தியசாலைகளுக்கு விஜயங்களை விரைவில் மேற்கொள்வதாகவும் இதன் போது சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் வாக்குறுதியளித்தார்.