அலுகோசு பதவிக்கு 102 விண்ணபங்கள் கிடைக்கப்பெற்றுள்ளனவென்றும் அவற்றில் 79 பேர் நேர்முகத் தேர்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ஜெயசிறி விஜயநாத் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நேர்முகத் தேர்வுகள், சிறைச்சாலை திணைக்களத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாத்தில் நடைபெறவுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.
அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்த 102 பேரில் அமெரிக்க பிரஜையொருவர் உள்ளடங்கயிருந்தார் என்றும் எனினும் அந்தப் பதவிக்கு இலங்கை பிரஜைகளே இணைத்துக்கொள்ளப்படுவர் என்றும் தெரிவித்தார்.
அலுகோசு பதவிக்கு இருவரை தெரிவு செய்வதற்காக, விசேட நேர்முகத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும், கல்வி, உடல் மற்றும் உள பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னரே, அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவர் என்றும் அவர் கூறினார்.
மேலும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்படுவோரின் குணாதிசயங்கள் மற்றும் குடும்பப் பின்னணி என்பவையும் கருத்திற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -