அரச நாடக விழா 2019 இன் 47 ஆவது விருது வழங்கும் வைபவம்


லாசார அலுவல்கள் அமைச்சு,கலாசார அலுவல்கள் திணைக்களம்.இலங்கை கலைக்கழகம்,அரச நாடக ஆலோசனைக் குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்த அரச நாடக விழா 2019 இன் 47 ஆவது விருது வழங்கும் வைபவம் கடந்த புதன் கிழமை (27) மாலை கொழும்பு நெலும்பொக்குன அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மங்கள விளக்கேற்றுவதையும்.சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாஸிம் உமர் உடனிருப்பதையும் வாழ்நாள் சாதனையாளர் விருதை சிரேஷ்ட கலைஞர் ஜெயலத் மனோரத்னவுக்கு வீடமைப்பு நிர்மாணத்துறை,கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரரேமதாசா வழங்குவதையும் தமிழ் குறு நாடகம்,நெடு நாடகம் ஆகியவற்றுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதை பிரபல நடிகர் சதீஷ் சந்திராவிடமிருந்து சிவராஜா பிரதீப் பெறுவதையும் கலாசாரப் பணிப்பாளர் அனுஷா கோகிலபெர்னாந்து.அமைச்சின் செயலாளர் பேர்னாட் வசந்த ஆகியோரையும் படங்களில் காணலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -