கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் சிரமதானப் பணிகள் நேற்று (3) ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
இச் சிரமதானப் பணியில் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள சமுர்த்திப் பயனாளிகள், பிரதேசத்திலுள்ள ஆண்கள், பெண்கள், எனப்பலரும் வருகைதந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர்.
பாடசாலைச் சூழலை சுத்தம் செய்து டெங்கு நோயிலிருந்து மாணவ சமுகத்தைப் பாதுகாக்க வேண்டி மேற்கொள்ளப்பட்ட இவ் வேலைத்திட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எம்.நியாசா, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.எம்.காதர், ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஏ.எம்.பைரூஸ், ஆகியோர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



