நிகழ்வை A.M.Mujahith கிறாஅத் ஓதி துவக்க வரவேற்பு உரையை ZERWO சமூக சேவை அமைப்பின் தலைவர் A.M.Ramzan அவர்கள் நிகழ்த்தினார் .
அவரது உரையில்,சென்ற ஒன்றுகூடலில் (30.06.218) எடுத்த தீர்மானங்களின் அமைவாக முதற்கட்டமாக அமைப்பின் சீருடை முடிவடைந்து தற்போது வழங்கி வைக்கப்படும் என்பதனையும், எதிர்காலத்தில் எம்மால் முடிந்த பணிகளை, உதவிகளை கற்பித்த பாடசாலை, சக நண்பர்கள் மற்றும் சமூகத்திற்கு திறன்பட செய்வதற்கு இறைவன் உதவ பிரார்தித்ததுடன் அனைவரது ஒத்துழைப்பும் முக்கியம் எனவும் வேண்டிக் கொண்டார். மேலும்,முன்னதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் இதன் பிற்பாடு நிறைவேற்ற என்னால் ஆன முழு பங்களிப்பையும் அர்ப்பணிப்புடன் வழங்குவேன் என்றதுடன் இந்த நிகழ்வு வாழ்வில் மறக்க முடியாத ஒரு நினைவு என்றும் கூறி உரையை முடித்தார்.
அதனைத் தொடர்ந்து விளக்க உரையினை ZERWOஅமைப்பின் செயலாளர் U.L.M. Faiz ஆசிரியர் அவர்கள் விவரித்தார்.
அவர் கூறுகையில், எம்மில் அனைவருக்கும் சமூக உணர்வும், அக்கறையும் இயல்பாகவே உள்ளது அதனை அர்த்தமுள்ள ஒரு சேவையாக செய்வதற்கு எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையின் மூலம் பிரகாசத்தை கொடுக்க முடியுமென்றும், இதன் வெளிப்பாட்டை இரு Batch நண்பர்களின் கஷ்டத்தை போக்க எம் நண்பர்கள் முன் வந்து நிதி சேகரித்து, தோள் கொடுத்து பங்கு கொண்ட போது மலர்ந்த தருணமே இந்த சமூக அமைப்பும் உருவாக பிரதான காரணம் என்று தெரிவித்ததுடன் பல திட்டங்களை எம் சமூகங்கங்களுக்கு நாம் செய்ய கடமைபட்டுள்ளோம் என்று கூறிச் சென்றார்.
இறுதியாக நன்றி உரை பொறியியளாளர் M.I.M.Riyas அவர்களால் வழங்கப்பட்டது. குறுகிய நாட்களுக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்றுகூடல் மிகவும் அழகாகவும், சிறப்பாவும் இடம் பெற்றமைக்கு முதற்கண் இறைவனுக்கும், திறன் பட ஒழுங்கு செய்த ஏற்பாட்டுக் குழுவுக்கும் மற்றும் சமூகமளித்த அனைவருக்கும் அதிலும் குறிப்பாக இந்நிகழ்வை மெருகூட்டி வெளிநாட்டிலுள்ள எம் உறவுகள்,நண்பர்கள் நேரடி ஒளிபரப்பு மூலம் காணச் செய்த Dharusafa TV நிருவாகத்திற்கும், செவ்வென தொகுத்து வழங்கிய அன்பான தொகுப்பாளர் Rinsan அவர்களுக்கும் ZERWO சார்பாக நெஞ்ஞார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சீருடை அறிமுகமும், இரபோசனமும் இனிதே இடம் பெற்று ஸலவாத்துடன் நடந்து முடிந்தது ZERWO அமைப்பின் ஒன்று கூடல்.





