'எழுச்சி பெறும் ஏறாவூர்' அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் கையளிப்பு மற்றும் அங்குரார்ப்பண நிகழ்வும் பொதுக் கூட்டமும்.

அகமட் எஸ்.முகைடீன்-
பிரதி அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் ஏற்பாட்டில் மூன்று நாட்களாக நடைபெற்ற 'எழுச்சி பெறும் ஏறாவூர்' செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வும் பொதுக் கூட்டமும் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை ஏறாவூரில் நடைபெற்றது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் தபாலதிபருமான எம். நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கைபரப்புச் செயலாளர் எம். முபீன், ஏறாவூர் பிரதேச சபை உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எம்.எஸ். நளீம் மற்றும் ஏறாவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள், போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
இதன்போது ஏறாவூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சௌக்கடி கடற்கரை பூங்கா மற்றும் வீதிகள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கபட்டன. அத்தோடு விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு நிர்மானம் மற்றும் மேலும் பல வீதி புனரமைப்பு போன்ற பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மேலும் இதன்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கான 3 மாடி கட்டட நிர்மானப் பணியினை ஆரம்பிக்கும்வகையில் அதன் அமைவிடம் மற்றும் அந்நிர்மானப்பணிக்குள் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் வைத்தியசாலை வைத்தியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. அத்தோடு அவ்வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறை தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்ட்டு அவற்றை நிவர்திப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -