கல்முனை ஸாஹிராவில் சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி தமக்கு கற்பித்த ஆசிரியர்களை பழைய மாணவர்கள் வீடுதேடிச் சென்று அவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்து பாராட்டி கௌரவிப்பு
எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி தமக்கு கற்பித்த ஆசிரியர்களை வீடு தேடிச் சென்று அவர்களை பாடசாலைக்குஅழைத்து வந்து மருத்துவ முகாமொன்றை ஏற்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து உணவுட்டி ,உபசரித்து ,பாராட்டி,பரிசில்கள் வழங்கி மீண்டும் அவர்களை தத்தமது வீ்ட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவமொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமைகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இடம்பெற்றது.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 1990 ஆம் ஆண்டு உயர்தரம் கற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து இவ்வருடஆசிரியர் தின நிகழ்வினை வித்தியாசமான முறையில் செய்து காட்டியுள்ளனர்.
ஸஹிரியன் 90 உயர்தர மாணவர்கள் அமைப்பின் செயலாளர் தபாலதிபர் யூ.எல்.எம்.பைசரின் நெறிப்படுத்தலில் கல்முனைஅஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் எம்.எம்.அல் அமீன் றிஸாத் தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், ஸாஹிராக் கல்லூரியின் அதிபர்எஸ்.முஹம்மட், ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர்களான சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா, ஏ.எம்.ஹூசைன் , ஏ.பீர்முஹம்மது , எம்.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட ஸஹிரியன் 90 உயர்தர மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் என பலரும்கலந்து கொண்டனர்.
அத்துடன் இவர்களுக்கு கற்பித்த தற்போது மரணித்துள்ள ஆசிரியர்களுக்காக துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.