கட்சிகளின் போட்டிக்கு இரையாகும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம்


விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் இழுபறி நிலையை கொண்டமைந்தமைக்கு நாட்டின் ஜனாதிபதியே காரணம் என நல்லாட்சி அரசின் கல்வியமைச்சராக இருந்த அகிலவிறாஜ் காரியவசம் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நான்கு மாதங்கள் இழுபறி நிலையை கொண்ட இந்நியமன தாமதத்திற்கு ஜனாதிபதி முட்டுக்கட்டையாக இருந்தார் என தற்போது கருத்தினை அகிலவிறாஜ் காரியவசம் அவர்கள் வெளியிட்டிருப்பது தெரிவு 3850 குடும்பங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தை நாட்டு மக்கள் இரு பெருபான்மை கட்சி என நோக்காது ஒன்றாகவே நோக்கி வந்தார்கள்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட நீலம்,பச்சை என பாகுபாடுபார்க்காது ஒருமித்த நோக்குடனே வாக்களித்திருந்தார்கள்.மக்களின் எண்ணத்தை முற்று முழுதாக குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டோர் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்களே தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் தெரிவு செய்யப்படவில்லை.பாடசாலைக் காலத்தில் வெளிக்காட்டிய விளையாட்டு திறமைக்கான அங்கீகாரமாகவே இந் நியமனம் எல்லோராலும் நோக்கப்பட்டது.
இருபெரும்பான்மை கட்சிகள் தங்களிடையே இருந்த அரசியல் போட்டிக்காக இவ்வாறான நியமனங்களை இரையாக்கி இருப்பது எந்த வகையிலும் ஜீரணிக்க முடியாமல் உள்ளது.கட்சிகளின் ஆதரவுகளை பெருக்க வேண்டும் என்பதற்காக 3850 இளைஞர்,யுவதிகளின் வாழ்க்கையினை பலிக்கேடாக ஆக்க முயல்வது இந் நாட்டின் வாழும் மனிதபிமானமுள்ள எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.
கட்சிகளை ஆதரிப்பதென்பது தனிப்பட்ட மனிதனின் விருப்பு, வெறுப்பிற்கு உட்பட்ட ஒரு விடயம்.எனவே அதனை ஒரு நியமனத்துடன் ஒப்பீடு செய்து அதனை வழங்காது இழுத்தடிப்பு செய்தது நாட்டில் அமைக்கப்படும் ஆட்சிகள் மக்களுக்கானதல்ல சுய இலாப நோக்குடையது என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
ஒரு நாட்டை எந்த கட்சி ஆழ்கிறதோ அந்த கட்சி எப்போதும் மக்களை ஒற்றை கண் கொண்டு பார்க்க வேண்டும்.காரணம் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை.நல்லாட்சி அரசின் கல்வியமைச்சர் நாட்டின் ஜனாதிபதி மீது தற்போது குற்றம் சுமத்தியுள்ளார்.விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கு காரணம் அவரே என்பதாக.

இலங்கை திருநாட்டை ஆளும் ஆட்சியாளர்களே நியமனங்களை கட்சிகளின் வங்குரோத்து அரசியலுக்காய் போடு காய்களாகவோ அல்லது இரையாகவோ ஆக்காதீர்கள்.நியமனத்தை நம்பி காத்திருக்கும் 3850 குடும்பங்களுக்கு பதில் கூற வேண்டியநிலையில் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
நாட்டை ஆள்வது எந்த கட்சியாகவோ அல்லது கூட்டாகவோ இருக்கட்டும்.இந் நியமனத்திற்கான பதிலை நீங்கள் அளிக்க வேண்டும்.அவர்களது வாழ்வியல் கஷ்டங்களை போக்க வேண்டும்.ஆட்சியாளர்களே நியமனங்களை நம்பி இருக்கும் குடும்பங்களை நடுத் தெருவிற்கு கொண்டு வந்து அவர்களது வாழ்க்கைகளை கட்சி பசிக்கு இரையாக்கி விடாதீர்கள்.
இந் நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் கொடுக்கப்பட வேண்டும்.அதற்கான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்பது 3850 குடும்பங்களின் கோரிக்கையாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -