சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்கள் எழுதிய "சாட்சியங்கள்" நூல் வெளியீட்டு நிகழ்வு 12.10.2018 வெள்ளிக்கிழமை பி.ப 3:30 மணிக்கு காத்தான்குடி பீச்வே ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மெளலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) தலைமை தாங்குவதுடன் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்கா வின் தலைவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் என்.எம்.அமீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அத்துடன் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக தலைவர்கள் என பல் துறை சாராரும் கலந்து கொள்ளவுள்ளனர்.