அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் முஹம்மது அனஸ் அக்மல் அஹமட், இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 163 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.
இவர், இலங்கை துறைமுக அதிகாரசபையில் பணிபுரியும் அக்கரைப்பற்றுவைச் சேர்ந்த முஹம்மது மொஹிடீன் அனஸ் - முஹம்மது அமீர் சபீனா தம்பதிகளின் புதல்வராவார்.
இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் முஹம்மட் நயீம், புலமைப்பரிசில் கற்றுக் கொடுத்த ஆசிரியர் முஹம்மட் முர்தலா, வகுப்பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர், ஆகியோர்களுக்கு பெற்றோர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.