தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி!

காரைதீவு நிருபர் சகா-ல்முனை நியுஸ்டார் விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்திவரும் ஏற்றியன் கிண்ண மென்பந்துகிரிக்கட் சுற்றுப்போட்டி கல்முனை கிஷா ஸ்ருடியோ ஆதரவில்
ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்த்தேசியக்கீதத்துடன் ஆரம்பமாகியது.

அணிக்கு 11பேர்கொண்ட 10ஓவர் மென்பந்துக்கிரிக்கட் சுற்றுப்போட்டியில் 24 கழகங்கள் கலந்துகொள்கின்றன.
எதிர்வரும் நவம்பர் மாதம் வரை தொடர்ந்து விடுமுறை தினங்களில் இச்சுற்றுப்போட்டி நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற
 முதல்போட்டியில் கல்முனை துளிர் கழகமும் ஈகிள் கழகமும் மோதின.

கழகத்தலைவர் ந.துஜிந்தர் தலைமையில் நடைபெற்ற முதல்நாள் அங்குரார்ப்பணநிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் திருமதி வி.செலஸ்ரினா றாகல் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கட்டடஒப்பந்தகாரர் லொயிட்ஹென்றிக் கடைஉரிமையாளர் எ.நிமலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -