களனி கல்வி வலயத்தில் தமிழ் மொழியில் தேசிய பாடசாலை – அமைச்சரவை அங்கீகாரம்


ளனி கல்வி வலயத்தில் தமிழ் மொழியில் தேசிய பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பில் கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அங்கீகாரத்துக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முழுமையான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதன் முடிவுகளை அறிவுக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அரசாங்க ஊடகப்பேச்சாளர்களாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.இதன்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த விடயத்தை தெரிவித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த பாடசாலை அமைப்பது தொடர்பாக அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இது தொடர்பாக அமைச்சரவையில் முழுமையான ஒப்புதலுக்காக விடயத்தை முன்வைத்தார்.

இதற்காக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது கம்பஹா. வத்தளை பிரதேசங்களில் தமிழ் மொழியில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக அருண் மாணிக்கவாசகம் , இந்து வித்தியாலயம் என்ற பெயரில் தமிழ் மொழி இந்து தேசிய பாடசாலையொன்று களனி கல்வி வலயத்தில் அமைப்பதற்காக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் தொடர்பாக கடந்தவார கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் தொடர்பாக இன்று தீர்மானம் கொள்ளப்பட்டதாக மேலும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -