இலங்கை சட்டக்கல்லூரி அனுமதி போட்டிப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடி கருத்தரங்கு இம்மாதம் செப்டெம்பர் 22 23 24 ஆகிய தினங்களில் சாய்ந்தமருதில் பொது நூலகத்துக்கு முன்னால் அமைந்துள்ள DMK ASSOCIATES நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.
3 நாட்களுக்கு நடாத்த திட்டமிடப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் சட்டமும் பொது அறிவும், பொது உளச்சார்பு மற்றும் மொழித்திறன் ஆகிய 3 பாடங்களையும் முழுமையாக உள்ளடக்கிய முழுநாள் கருத்தரங்கு துறைசார் நிபுணர்களை கொண்டு இடம்பெறவுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0775746881 இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.
எமது பிராந்தியத்தில் சட்டத்துறை மாணவர்களை அதிகரித்து துறை ரீதியான நிபுணர்களை உருவாக்கும் இவ்வாறனான பாரிய முயற்சியினை DMK நிறுவனம் வழங்கி வருவது எதிர்காலத்தில் இடம்பெறுகின்ற இவ்வாறான உயர் கல்வி வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்களை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.