கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது (Gulf Federation for Kalmunai) ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான ஹஜ் பெருநாள் தின ஓன்று கூடலும் T Shirt அறிமுக நிகழ்வும் அண்மையில் தோஹாவில் அமைந்துள்ள Old Airport Park இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் கத்தாரில் தொழில்புரியும் கல்முனை பிரதேசத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பல சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களினால் மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்பட்ட இந்நிகழ்வானது கடல் கடந்து கத்தாரில் நாலாபுரங்களிலும் பறந்துவாழும் கல்முனை வாழ் சகோதர்களை ஒன்று சேர்த்த உறவுப்பாலமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்களினால் இவ்வரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திதந்த Gulf Federation for Kalmunai (GFK) அமையத்தினை வாழ்த்தி வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் .