இலங்கை அரசியலில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மகத்தான பணிபுரிந்த வரலாற்று நாயகர்களின் வரிசையில் இராஜாங்க அமைச்சர் டாக்டர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் தடம்பதிக்கிறார் என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இஸட் எம். சாஜித் தெரிவித்துள்ளார்.
நிலையான சேவைகளால் மக்களை கவர்ந்து வரும் ஒரு தலைவன் என்ற வகையில் இராஜாங்க அமைச்சர் டாக்டர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் சேவைகளை பாராட்டி இவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மறைந்த மாபெரும் தலைவர்கள் மர்ஹூம்களான சித்தி லெப்பை, பதியுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ். ஹமீத்,டீ.பி. ஜாயா, எம்.எச் எம். அஷ்ரப் வரிசையில் வரலாற்றில் தடம்பதிக்கிறார் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.
ஆயிரக் கணக்கான அரசியல் வாதிகளுக்குள் “மிக தூரநோக்கான” சிந்தனையில் சமூகத்திற்கானவிடிவெள்ளிகளாக மிளிர்ந்தவர்கள் ஒரு சிலரே!
எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் நிலமைகள் எப்படியும் ஆகலாம், எதுவும் நடக்கலாம் என்ற ஆயிரம் ஐயப்பாடுகளுக்குள்ளும் ஒரு சமூகம் தலைநிமிர்ந்து தைரியமாக, கண்ணியமாக வாழக்கூடிய, வழிகாட்டக்கூடிய உன்னதமான ஒரு வரலாற்று பணியைபிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் திறம்பட செய்து வருகிறார்.
இலங்கையில், பல ஏக்கர் நிலப்பரப்பில் அதி நவீன வசதிகளை கொண்டு உருவாகி வரும் “பல்கலைகழகம்”. மட்டக்களப்பு-பொலன்னறுவை எல்லையை அண்மித்த புணாணை எனும் கிராமத்தில் பல பில்லியன் ரூபா செலவில் இந்த பல்கலைக்கழகம் உருவாகி வருகிறது.
தற்கால அரசியலில் சிறுபான்மை மட்டுமல்ல எந்தவொரு பெரும்பான்மை அரசியல் தலைவராலும் செய்ய முடியாத ஒரு பாரிய பணியை தனி ஒருவராக சிந்தித்து அதற்கு செயல்வடிவமும் கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு விடயத்திலும் ஒரு புதுமையை, அழகை கையாளும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கலைத்துவம் பாராட்டத்தக்கது.
எத்தனையோ இனவாத எதிர்ப்புகள், உள்ளறுப்புக்கள், காட்டிக்கொடுப்புகளுக்கு மத்தியிலும் மிக தைரியமாக நின்று இந்த பிரம்மாண்டத்தை அவர் அமைத்து வருகிறார்.
ஏராளமானோர்களுக்கு அதில் வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாமல் அழியாத ஒரு நிலையான கல்விச் செல்வத்தையும் எதிர்கால சந்ததிக்காக ஏற்படுத்தி இருக்கிறார்.
இதுபோன்ற அவரது தூர நோக்குள்ள பல்வேறு முயற்சிகளும் வெற்றியடைய பிரார்த்திப்போம்.