ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் தேம்ஸ் கல்லூரியின் அனுசரணையில் இளைஞர்களுக்கான தலைமைத்தும் மற்றும் ஆளுமை விருத்திப் பயிற்சி இலவச கருத்தரங்கு (15) ஞாயிற்றுக்கிழமை கல்முனை ஸாஹிரா கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr. அஷாட், கல்முனை சாஹிராக் கல்லூரி அதிபர் எம்.எஸ். முகம்மட், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முபாரக் அலி, தேம்ஸ் கல்லூரியின் திட்டமிடல் முகாமையாளர் ரங்க, சந்தைப் படுத்தல் முகாமையாளர் சுகந்த பாலகிருஷ்னன், உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர் சப்ராஸ் நாசீர் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது நடைபெற்ற பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு தேம்ஸ் கல்லூரியினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -