திருகோணமலை மொறவெவ பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இன்று (31) காலை பொலிஸ் பொறுப்பதிகாரி நிஹால் குலதுங்க தலைமையில் நடைபெற்றது.
மொறவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற அறுபதுக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பொலிஸ் அணிவகுப்பின் போது பொலிஸாரின் சீருடைகள் மற்றும் உடற்பயிற்சிகள் மற்றும் பொலிஸார் தங்கியிருக்கும் அறைகள் பரிசோதிக்கப்பட்டதுடன் சமையல் அறை மற்றும் பாவிக்கும் கிணறுகள் போன்றவையும் சோதனையிடப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.
இந்த அணிவகுப்பு மரியாதையை கன்தளாய் பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ஹேமசிறி மற்றும் கமல் ரணவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.



