BCAS கல்முனை வளாகத்தின் CSR நிகழ்ச்சித்திட்டத்தில் ஓர் அங்கமாக இலவச கணணி (Computer) மற்றும் மடிக்கணணிகள் (Laptop) திருத்திக் கொடுக்கப்படும் Free PC CLINIC WHORKSHOP ஒன்று கடந்த 11ம் தேதி (11.07.2018) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபம் முன்பாக வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்ச்சியினை BCAS கல்முனை வளாகத்தின் BTEC HND in COMPUTING மாணவர்களின் “IT SOCIETY” அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வு சம்மாந்துறை மக்களிடம் பெரு வரவேற்பைப்பெற்றதுடன் BCAS உயர்கல்வி வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கம்பியூட்டர் பற்றிய அறிவினை பரீட்சித்துப் பார்க்கும் ஒரு களமாகவும் மேற்படி முகாம் அமைந்திருந்தது.
சுமார் 30ற்கும் மேற்பட்ட கணணிகள் மற்றும் மடிக்கணணிகளை முகாமில் வைத்து உடனடியாக திருத்திக் கொடுத்ததோடு பாடசாலை, நகரசபை போன்ற அரச நிறுவனங்களுக்கும் BCAS மாணவர்கள் நேரடியாக சென்றும் அங்குள்ள சில கணணிகளை பழுதுபார்த்து கொடுத்தனர்.
மேற்படி PC CLINIC WHORSHOP ஆனது ஓட்டமாவடி, மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் BCAS யின் பழைய மாணவர்களாலும் ஏற்கனவே நடாத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தகவலும் படமும் - பைசர் அமான்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -