சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் 67வது குருபூஜை நாளையதினம்(21) நடைபெறுவதனையொட்டிய கோமாதாபூஜை திருவிளக்குப்பூஜை யாகபூஜை அன்னதானம் என்பன இன்று(20) வெள்ளிக்கிழமை நடைபெறும்.
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஜீவசமாதி ஆலயத்தில் இந்நிகழ்வுகள் ஆலயத்தலைவர் சி.நந்தேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளன.
நாளை (21) சனிக்கிழமை காலை பாற்குடபவனி இடம்பெறும். பின்பு பஜனை இடம்பெற்று கல்விச்சாதனையாளர்கள் கௌரவிப்பு நடைபெறும். தொடர்ந்து சுவாமியின் குருபூஜை நிகழ்வுகளையடுத்து மதியம் அன்னதானம் இடம்பெறும்.
நாளை மாலை ஆலயவளாகத்தில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும் என ஆலயபரிபாலனசபைச் செயலாளர் த.தவகுமார் தெரிவித்தார்.
சுவாமிகள் பாரதநாட்டின் இராமநாதபுரமாவட்ட பெருநாழிஇராச்சியத்தின் சிற்றரசன் மகனாகப்பிறந்து இலங்கைக்குவந்து பல இடங்களிலும் பித்தனாக நடமாடித்திரிந்து பல சித்துக்கள் செய்து சித்தராகி காரைதீவில் 1951.07.21ஆம் திகதி ஜீவசமாதியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.