இந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்

முர்ஷிட்-
லங்கைக்கு இந்திய அரசாங்கத்தினால் தொடர்ந்தேர்ச்சியாக பல்வேறுஉதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக இலங்கைஅரசாங்கமும் நாட்டு மக்களும் இந்திய அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றிதெரிவிக்க வேண்டும் என்று கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும்கிராமியப் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலிதெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் சுகாதார நலனைக் கருத்திற் கொண்டுஇந்திய அரசாங்கத்தினால் மூவாயிரத்து நானூறு மலசலகூடங்கள் அமைப்பதற்கானஒப்பந்தம் இன்று (வியாழக்கிழமை) இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில்இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதிஅமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றவற்றுக்குப் பின்னர்இந்திய அரசாங்கம் பல்வேறு உதவித்திட்டங்களை எமது நாட்டுக்கு வழங்கிஇருக்கின்றது. எமது நாட்டுக்கு ஐம்பதாயிரம் வீடுகளை வழங்கியுள்ளார்கள்.பாடசாலைகள் அமைத்தல், வைத்தியசாலைகள் அமைத்தல், மழை நீரைத் தேக்கிஉற்பத்தியை மேம்படுத்தல் திட்டம் மற்றும் நாட்டிலே எல்லா பிரதேசங்களுக்கும்நோயாளிகளை எடுத்துச் செல்கின்ற அம்புலன்ஸ் திட்டத்தினையும்அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

அதேபோன்று இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின்சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற வேலைத்திட்டத்திற்கமைய முந்நூறுமில்லியன் ரூபா செலவில் மூவாயிரத்து நானூறு மலசலகூடங்கள் அமைப்பதற்கானபுரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மிக விரைவிலே கடற்றொழில்நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்திஅமைச்சிற்கூடாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்திற்கூடாகவும்இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காக இந்திய நாட்டுஅரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் இச்சந்தர்ப்பத்திலே நன்றிகளைத்தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள்அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்டீ.கே. ரேணுகா ஏக்கநாயக்க ஆகியோருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்இடம்பெற்றது. இதனடிப்படையில் இந்திய நாட்டின் முந்நூறு மில்லியன் ரூபா நிதிஒதுக்கீட்டில் மூவாயிரத்து நானூறு மலசலகூடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளபதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அமைக்கப்படவுள்ளதாக பிரதிஅமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகத்தின் உதவித் தூதுவர் அரிங்தம் பக்ச்சி,அமைச்சின் மேலதிகச் செயலாளர் எஸ். சேனாநாயக்க, திட்டப் பணிப்பாளர் திருமதி.ஏ.டீ. தஹநாயக்க, பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்.எம். தௌபீக்மற்றும் இவ்வேலைத்திட்டத்திற்கான திட்ட இணைப்பாளர் ஏ.எச்.எம். அன்வர்உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -