30வருட ஆசிரியசேவையுடன் ஓய்வுபெறும் பத்மபுவனேந்திரன்! பாராட்டிக்கௌரவித்து வழியனுப்பிய சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரி!

காரைதீவு நிருபர் சகா-
ல்முனையைச் சேர்ந்த பிரபல பட்டதாரி ஆசிரியர் ரி.ஜே. பத்மபுவனேந்திரன் தனது 30வருட ஆசிரியசேவையினை பூர்த்திசெய்து ஓய்வுபெற்றுள்ளார்.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியிலே உயர்கல்வியைப் பயின்ற அவர் இறுதி ஜந்தரை வருடங்கள் அதே பாடசாலையில் ஆசிரியராகவிருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ளார்.

அவருக்கு நேற்று அந்தகல்லூரியின் அதிபர் முத்துஇஸ்மாயில் தலைமையிலான பிரதிஅதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட கல்விச்சமுகம் பாராட்டிக்கௌரவித்து வழியனுப்பிவைத்தது.

அவர் கல்முனைஉவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் உயர்கல்வியையும் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முதலாவது விவசாய விஞ்ஞான பட்டதாரி அணியில் பயின்று பட்டதாரியானவர்.

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் முதல் ஆசிரியநியமனத்தைப்பெற்று ஒருவருடகாலம் கற்பித்து பின்னர் கல்முனை கார்மேல் பற்றிமாக்கல்லூரியில் 24வருடங்கள் கற்பித்து சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் ஜந்தரை வருடங்கள் கற்பித்தவர்.

உயர்வகுப்புகளில் விவசாயவிஞ்ஞானத்தை கற்பித்து பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல உதவியாகவிருந்த பத்மபுவனேந்தின் ஆசிரியரின் ஓய்வு மாணவசமுதாயத்திற்கு இழப்பாகுமென அதிபர் முத்து இஸ்மாயில் புகழாரம் சூட்டினார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -