இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாட்டைச்சேர்ந்த பிரபல முதலீட்டாளர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்குமிடையிலான கலந்துறையாடல் இன்று (11) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துறையாடலின் போது இந்தியா பஞ்சாப் மாநிலத்தைச்சேர்ந்த பிரபல முதலீட்டாளர்களான அமறூத் ஜவ்ரா மற்ரக்பீர் றும் பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் சிங் ஜவ்ரா ஆகியோருடன் சிங்கப்பூரினைச்சேர்ந்த கட்டிடக்கலைஞர்களும் ,முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த இக்குழுவினர்
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் இயற்கையை மையமாகக்கொண்ட ஒன்றினைந்த உல்லாசப்பிரயான அபிவிருத்தி வலயத்தினை ஸ்தாபிப்பது தொடர்பிலும் விவசாய கால் நடைத்
துறைகளில் தொழில்நுட்ப பரிமாற்றித்தினை ஊக்குவிப்பதின் ஊடாக இத்துறைகளின் உற்பத்தியையும், உற்பத்தி திறனையும் அதிகரித்து முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அத்துடன் இக்குழுவினர் புல்மோட்டை கனிய வள கூட்டுத்தாபனம், உப்புவௌி பிராந்திய கால்நடை பண்ணை ஆகியவற்றினையும் சென்று பார்வையிட்டனர்.
இக்கலந்துறையாடலில் ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன மற்றும்
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் பொது முகாமையாளர் டொக்டர் ஞானசேகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்தியா பஞ்சாப்மாநிலத்தின் முதலீட்டாளர் ரக்பீர் சிங் ஜவ்ரானுக்கு ஞாபக சின்னமொன்றினையும் ஆளுநர் ரோஹித போகொல்லாகம வழங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.