வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு கானாத பெருவெற்றி மஸ்தான் எம்.பி. பெருமிதம்



டந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் தாமரை மொட்டு பிரிந்து தனியாக போட்டியிட்ட பின்னரும் 24275 வாக்குளைப் பெற்று 31 ஆசனங்களை சுதந்திர கட்சி கைப்பற்றியுள்ளது.
இதுவே இப்பகுதியில் முதன் முதலாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பெறும் அதிக பட்ச ஆசனங்களாகும். வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 14388 வாக்குளைப் பெற்று இலங்கை தமிழரசு கட்சிக்கு அடுத்தபடியான நிலையில் அது உள்ளது. 31 ஆசனங்களில் 27 ஆசனங்கள் சுதந்திர கட்சிக்குரியதாகவும் 4 ஆசனங்கள் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்ட பா.உதயராசா தலைமையிலான ஸ்ரீரெலோ கட்சிக்குரியதாகவும் உள்ளது.
 இதன்படி வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர சபையில் 3 ஆசனங்களையும் வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் 4 ஆசனங்களையும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 5 ஆசனங்களையும் வவுனியா வடக்கு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. 
 மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபையில் 1 ஆசனத்தையும் மன்னார் பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் மாந்தை மேற்கு பிரதேச சபையில் 3 ஆசனங்களையும் நானாட்டான் மற்றும் முசலி பிரதேச சபைகளில் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் அது வென்றுள்ளது. 
 முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் மாந்தை கிழக்கு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் கரைதுரைப்பற்று பிரதேச சபையில் 1 ஆசனத்தையும் மரைதம்பட்டு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் அது கைப்பற்றியுள்ளது. வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடைந்திருக்கும் வெற்றி தொடர்பில் ஜனாதிபதியும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். 
 நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வன்னி மாவட்டத்தில் எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது வரலாறு காணாத மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னிமாவட்ட அமைப்பாளராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களை நியமித்து குறுகிய காலத்திலேயே இந்த பிரமிக்கத்தக்க வளர்ச்சியை கட்சி எட்டியுள்ளதென ஜனாதிபதி புகழாரம் சூட்டியுள்ளார். 
 மேலும் மூவின மக்களுக்கும் சேவையாற்றும் காதர் மஸ்தான் எம்.பி அவர்களுடைய தன்னலமற்ற சேவைகளை உணர்ந்த மக்கள் நன்றியுணர்வோடு வாக்களித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளமை வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு கானாத பெருவெற்றி மஸ்தான் எம்.பி. பெருமிதம் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 
வன்னி தேர்தல் மாவட்டத்தில் தாமரை மொட்டு பிரிந்து தனியாக போட்டியிட்ட பின்னரும் 24275 வாக்குளைப் பெற்று 31 ஆசனங்களை சுதந்திர கட்சி கைப்பற்றியுள்ளது. இதுவே இப்பகுதியில் முதன் முதலாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பெறும் அதிக பட்ச ஆசனங்களாகும். வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 14388 வாக்குளைப் பெற்று இலங்கை தமிழரசு கட்சிக்கு அடுத்தபடியான நிலையில் அது உள்ளது. 31 ஆசனங்களில் 27 ஆசனங்கள் சுதந்திர கட்சிக்குரியதாகவும் 4 ஆசனங்கள் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்ட பா.உதயராசா தலைமையிலான ஸ்ரீரெலோ கட்சிக்குரியதாகவும் உள்ளது. இதன்படி வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர சபையில் 3 ஆசனங்களையும் வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் 4 ஆசனங்களையும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 5 ஆசனங்களையும் வவுனியா வடக்கு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபையில் 1 ஆசனத்தையும் மன்னார் பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் மாந்தை மேற்கு பிரதேச சபையில் 3 ஆசனங்களையும் நானாட்டான் மற்றும் முசலி பிரதேச சபைகளில் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் அது வென்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் மாந்தை கிழக்கு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் கரைதுரைப்பற்று பிரதேச சபையில் 1 ஆசனத்தையும் மரைதம்பட்டு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் அது கைப்பற்றியுள்ளது. வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடைந்திருக்கும் வெற்றி தொடர்பில் ஜனாதிபதியும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -