இலங்கை சட்டத்தின் அடிப்படையில் 08 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு குற்றத்துக்கான பொறுப்புக்கள் சுமத்தப்படாது.
எனினும் இது மிகக் குறைந்த வயதாக உளவியல் வைத்தியர்கள் மற்றும் அதனுடன் தொடர்பான நிபுனர்களின் எண்ணமாகும்.
அதனடிப்படையில், ஆகக் குறைந்த வயதெல்லையினை 12 வயதாக அதிகரிப்பதற்கும், 12 வயதுக்கு அதிகமான மற்றும் 14 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளுக்கு குறித்த குற்றம் தொடர்பிலான புத்திக் கூர்மை காணப்பட்டதா என்பதை கணிப்பிடும் அதிகாரத்தினை மாவட்ட நீதவான்களுக்கு வழங்கும் வகையில் 1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடைமுறைச்சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமரப்பிப்பதற்குமாக நீதியமைச்சர் தலதா அதுகோரல வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
