A.R.M.rifay Eravur-
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்காக மீராகேணி வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் , ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் முரீஸ் இன் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டில் உறக்கத்தில் இருந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்ததாக நம்பப்படும் குழு ஒன்று வீட்டின் கதவு , மற்றும் ஜன்னல்களை நோக்கி சராமரியான தாக்குதலை மேற்கொண்டு சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக வேட்பாளர் முரீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வீட்டின் முன் கதவு மற்றும் ஜன்னல்கள் என்பன உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டின் மீது கல்வீச்சும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


