அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் கமல்ஹாசன்

ராமேஸ்வரத்திலுள்ள டொக்டர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்திய குடியரசின் முன்னாள் தலைவரான டொக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமிற்கு பல கனவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், அது போன்ற கனவுகள் கொண்டவர்களில் தானும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.மேலும், மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதே தனது முழு நேர கடமையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரசியலில் கமலுடன் இணைந்து செயற்படுவது குறித்து காலமே பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த கருத்தை தான் வழிமொழிவதாக நடிகர் கமல்ஹாசன் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -